வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ள பணியாளர்களை முதற் கட்டமாக கணினி குலுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 24 May 2024

வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ள பணியாளர்களை முதற் கட்டமாக கணினி குலுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணி.


ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, 07.அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ள பணியாளர்களை முதற் கட்டமாக கணினி குலுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணியினை (First Randomization) மேற்கொண்டார்கள்.

07.அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற உள்ள பணியாளர்களை ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இன்று முதற் கட்டமாக கணினி குலுக்கள் முறையில் தேர்வு செய்யும் பணியினை (First Randomization) மேற்கொண்டார்கள். அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 அன்று முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வாலாஜா அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கபட்டு வருகிறது. 


அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற ஜீன் 04 அன்று நடைபெறவுள்ளது. மேற்படி, வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், மற்றும் வாக்கு எண்ணிக்கை நுண் பார்வையாளர்களை முதற் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணிகளை (FIRST RANDOMIZATION) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, மேற்கொண்டார்கள்.


அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மொத்தம் 102 வாக்கு எண்ணிக்கை மேற்பர்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 102 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 306 நபர்கள் முதற் கட்டமாக கணினி குலுக்கல் முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.


ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் பணியாற்றுவார்கள். வாக்கு எண்ணிக்கையானது திருத்தணி சட்டமன்ற தொகுதி வாக்குகள் 24 சுற்றுகளிலும், அரக்கோணம் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 18 சுற்றுகளிலும், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி வாக்குகள் 22 சுற்றுகளிலும், காட்பாடி சட்டமன்ற தொகுதி வாக்குகள் 18 சுற்றுகளிலும், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வாக்குகள் 21 சுற்றுகளிலும், மற்றும் ஆற்காடு சட்டமன்ற தொகுதி வாக்குகள் 21 சுற்றுகளிலும் நடைபெறும்.


இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜேந்திரன், தேர்தல் வட்டாட்சியர்  கணேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


- ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444 

No comments:

Post a Comment

Post Top Ad