பெங்களூரில் இருந்து சென்னைக்கு தமிழக அரசின் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா கடத்தி வந்த சொகுசு கார் விபத்து - மூன்று லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் சொகுசு கார் பறிமுதல். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 22 May 2024

பெங்களூரில் இருந்து சென்னைக்கு தமிழக அரசின் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா கடத்தி வந்த சொகுசு கார் விபத்து - மூன்று லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் சொகுசு கார் பறிமுதல்.


ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் வாலாஜாபேட்டை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடிருந்ததனர், இந்நிலையில் அவ்வழியாக  அதிவேகமாக சென்னை நோக்கி வந்த சொகுசு காரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்வதற்காக போலீசார்  வழி மறைத்தனர்.

போலீசாரை கண்ட காரில் இருந்தவர்கள் காரை அதிவேகமாக இயக்க முயற்சித்த போது முன்னாள் இருந்த கண்டைனர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது இதனை அடுத்து காரில் இருந்த இருவரை மடக்கி பிடித்த போலீசார் விபத்துக்குள்ளான சொகுசு காரை சோதனை செய்தனர் சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது.


இதனை அடுத்து 200 கிலோ குட்கா மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அரவிந்த் ஜி(26) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தசரத் சிங்(27) ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர் கடத்திவரப்பட்ட குட்காவின் மதிப்பு சுமார் மூன்று லட்சம் இருக்கும் என காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad