17 ஆண்டுகாள உழைப்பு சுரண்டல், டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா தொழிலாளர்கள் வேதனை. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 11 June 2024

17 ஆண்டுகாள உழைப்பு சுரண்டல், டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா தொழிலாளர்கள் வேதனை.


ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா பவுண்டரி டிவிஷனில் சுமார் 2000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இதில் 1200 நிரந்தர தொழிலாளர்கள், 800 ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். 17 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிறுவனம் பணி அளிக்க மறுத்ததால் திங்களன்று (ஜூன். 10) முத்துக்கடை வேம்புலி அம்மன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


நிரந்தர தொழிலாளி செய்யும் அதே வேலையை ஒப்பந்த தொழிலாளர்கள் செய்கின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் நிறுவனத்தில் கிடையாது, 17 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், நிரந்தர தொழிலாளிக்கும் INTUC-NEEU ஒரே சங்கம் தான் நிறுவனத்தில் உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிர்வாகம் ஆந்திராவில் உள்ள நாயுடு பேட்டை தொழிற்சாலைக்கு இடமாற்றம் செய்வதாக கூறப்படுகிறது. இடமாற்றம் செய்யும் போது இங்கு பணிபுரிந்த 17 ஆண்டுகால சர்வீஸ் கணக்கில் கொள்ளாமல் புதிதாக ஒரு வருட பயிற்சியாளராக பணிக்கு அமர்த்துகிறது. இதை INTUC-NEEU சங்கத்திடம் முறையிட்டால் நிர்வாகம் சொல்லும்படி கேளுங்கள் என்று சங்கம் கை விரித்துள்ளது.  


இந்நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூன். 03 ஆம் தேதி முதல் நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் வேலை நீக்கத்திற்கு எதிராக AICCTU -வில் இணைக்கப்பட்ட தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.


இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னாள்  வாலாஜா தாலுக்கா குழு தலைவர் ம. ஜெயகாந்தன், AICCTU மாநில சிறப்பு தலைவர் சொ. இரணியப்பன், சென்னை பெருநகர மாவட்ட தலைவர் ஆபிரகாம், மாநிலத் துணைத் தலைவர் மு. தினேஷ் குமார், சிபிஎம்எல் மாவட்ட குழு உறுப்பினர் பிலால் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி கோஷங்களை எழுப்பினர்.


கோரிக்கைகளாக, வேலை மறுக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரந்தர தொழிலை ஒப்பந்தத்தில் விடும் டிவிஎஸ் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 ஆண்டுகள் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad