இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நாகவேடு கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 101-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெமிலி மத்திய ஒன்றிய திமுக கழகம் சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் திமுக கழக இருவண்ண கொடியை ஏற்றி 150 பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல் மற்றும் பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கி கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான. சுந்தராம்பாள் பெருமாள், நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன், நெமிலி மத்திய ஒன்றிய அவைத்தலைவர். நரசிம்மன், நெமிலி மேற்கு ஒன்றிய பொருளாளர். பிரகாஷ், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர். தனசேகரன், வழக்கறிஞர்கள். குமரகுரு, பாபு, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர். முனைவர் மு.கோபாலகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர். முருகேசன், இளைஞரணி அமைப்பாளர். எல்லப்பன், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர்கள். சதீஷ், முரளி முகேஷ், இளைஞரணி துணை அமைப்பாளர். நட்பு நவீன், சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர். மணிகண்டன் கருணாநிதி, நாதவேடு கிளை கழக செயலாளர்கள். கந்தன், சுந்தர், தங்கராஜ், பாளையத்தான், சுந்தரம், துளசி, நந்தன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment