ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பள்ளூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் கலந்துகொண்டு முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் மற்ற சேவைகளும் வழங்கப்பட்டன. இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர். சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள். வஜ்ரவேலு, சைபுதீன், பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர். பிரதாப், மற்றும் பிறதுறைகளில் அலுவலர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா
No comments:
Post a Comment