ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சென்னை பெங்களூர் வேலூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலை ஓரங்களில் உள்ள கால்வாய் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த நிலையில் மருத்துவமனை அருகில் தற்போது நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மிக மிகவும் மந்தமான முறையில் நடைபெற்று வருவதால் பிரிட்ஜ் கால்வாயில் ஓரமாக கட்டப்பட்டுள்ள கட்டுமான கம்பிகள் அபாயகர நிலையில் பல மாதங்களாக காட்சியளித்து வருகிறார்.
மேலும் தற்போது கட்டப்பட்டுள்ள பிரிட்ஜ் கால்வாய் ஓரமாக உணவகங்கள் டீக்கடை மற்றும் சில்லறை கடை வியாபாரிகள் அதிகமாக வியாபாரம் செய்து வருவதால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கால்வாய்களின் ஓரமாக உள்ள கட்டு கம்பிகளில் நடுவில் ஆபத்தான முறையில் நடந்து செல்வதால் எந்த நேரத்திலும் நிலை தடுமாறி கம்பிகளின் மீது இழுந்து உயிரிழப்பு ஏற்படும் என தெரிகிறது எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள கட்டு கம்பிகளை முறைப்படுத்தி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாகவே தெரிவிக்கின்றனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444...
No comments:
Post a Comment