மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 10 June 2024

மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (10.06.2024) நடைபெற்ற திங்கள் கிழமை மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார்கள்.


மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத்துறை காவல்துறை. ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள். பேரூராட்சித்துறை கூட்டுறவு கடனுதவி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு
வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த 240 மனுக்களை ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மணு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.


மாவட்ட தொடர்ந்து, பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு தலா ரூ.35,000/- வீதம் ரூ.1,75,000/- இயற்கை மரணம் ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கினார். பின்னர், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து சந்திரன் மனைவி மல்லிகா அவர்களை பாம்பு கடித்து உயிரிழந்த குடும்பத்திற்கு ரூபாய் ஒரு இலட்சமூம், துரைமுருகன் மகன் அன்பரசன் அவர்கள் நீரில் மூழ்சி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் ஆக மொத்தம் ரூ.2 இலட்சம் மதிப்பில் காசோலைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.


இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையின் மூலம் நவீன செயற்கை கால் 3 நபர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலும் ஆக மொத்தம் ரூ.2,25 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ச.வளர்மதி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். இக்கூட்டத்தினில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், நேர்முக உதவியாளர் (நிலம்) கலைவாணி மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.


மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad