கலவை அருகே 5 திருகோவிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம் - ஏவலமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 9 June 2024

கலவை அருகே 5 திருகோவிலில் நடைபெற்ற மஹா கும்பாபிஷேகம் - ஏவலமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.


ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மேல்நேத்தப்பாக்கம்  கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ விஜயவினாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமன்ய சுவாமி, ஸ்ரீ மதுசூதனப்பெருமாள், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்  திருக்கோயில என 5 கோவில்களுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


முன்னதாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாக சாலையில் முதற்கால யாக சாலையில் பகவத் பிராத்தனை, ஸ்ரீ வரசித்தி கணபதி பூஜை, யஜமான சங்கல்பம் பூஜை, வாஸ்து ஹொமம், அக்னி பிரதிஷ்ட்டை, இரண்டாம் கால யாகத்தில் கோ பூஜை, அக்னி ஆராதனை, கும்ப பூஜை, பிரதான ஹோமம், மகா பூர்ணாஹூதி நடைபெற்று யாத்ராதானம் மஹா தீபாராதனை நடைபெற்றது. 


தொடர்ந்து வேத பட்டாட்சியர்கள் பூஜை செய்யப்பட்ட கலசத்தை தலையில் சுமந்து மங்கல இசை முழங்க கோவிலில் வலம் வந்து விமான கோபுரம் வந்தடைந்ததும் கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கற்பூர தீபாராதனை காட்டி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற புனித நீரை பக்தர்கள் மீது தெளித்தபோது கோவிந்தா கோவிந்தா என பக்தி  முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.


தொடர்ந்து கருவறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீவிஜயவினாயகர்,வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமண்ய சுவாமி, மதுசூதனப்பெருமாள், மாரியம்மன், பக்த ஆஞ்சநேயர் என அனைத்து சுவாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றதோடு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கற்பூர தீப ஆராதனை காட்டப்பட்டது இதில் மேல் நேத்தப்பாக்கம் சுற்றியுள்ள  பிண்டித்தாங்கல், கலவை, கே.வேலூர், அகரம், டி.புதூர் உள்ளிட்ட பல்வேறு  கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad