சாலையில் ஓரத்தில் அனுமதியின்றி நிறுத்திய வாகனங்களுக்கு நெமிலி போலீசார் அபராதம் :திடீர் வாகன சோதனையால் பரபரப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 3 June 2024

சாலையில் ஓரத்தில் அனுமதியின்றி நிறுத்திய வாகனங்களுக்கு நெமிலி போலீசார் அபராதம் :திடீர் வாகன சோதனையால் பரபரப்பு!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் உள்ள காஞ்சிபுரம் - திருத்தணி சாலையின் ஓரத்தில் அனுமதியின்றி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இலட்சுமிபதி தலைமையில் நெமிலி போலீசார் அபராதம் விதித்தனர். தொடர்ந்து அனுமதியின்றி வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.


மேலும் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கும்,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுமாறும், அனுமதியின்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் போலீசார் தரப்பில் அறிவுறுத்தபட்டது. இதில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் லோகேஷ், யுவராஜ், சக்திவேல், குமார், சதாசிவம் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.


- செய்தியாளர் பிரகாரம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad