இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி, பனப்பாக்கம், பெரப்பேரி, ரெட்டிவலம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் மறைந்த முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நெமிலி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய பெருந்தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். இதில் பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், பேரூர் செயலாளர் ஜனார்த்தனன், மாவட்ட மகளிரணி தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வடகண்டிகை பாபு, இளைஞரணி ராகேஷ் ஜெயின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெரப்பேரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி. பெருமாள், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், ஒன்றிய அவைத்தலைவர் நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ரெட்டிவலத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி. இரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய பொருளாளர் பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பனப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் என்.ஆர்.சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் பனப்பாக்கம் பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், பேரூர் மகளிரணி தொண்டரணி அமைப்பாளர் உமாவதி கிருஷ்ணமூர்த்தி, துறையூர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா
No comments:
Post a Comment