பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஜீரோ என திமுக சொல்வது அப்பட்டமான அரசியல், தமிழக முதல்வர் அதனை கைவிட வேண்டும் - ரத்தினகிரி முருகன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த தமிழிசை செளந்தரராஜன் பேட்டி - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 29 July 2024

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஜீரோ என திமுக சொல்வது அப்பட்டமான அரசியல், தமிழக முதல்வர் அதனை கைவிட வேண்டும் - ரத்தினகிரி முருகன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த தமிழிசை செளந்தரராஜன் பேட்டி


ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியில் உள்ள புகழ்பெற்ற பாலமுருகன் ஆலயத்தில் இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு பாஜகவின் முன்னாள் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது கணவருடன் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்ய வந்த அவரை, பாஜக நிர்வாகிகளும், கோவில் நிர்வாகமும் சிறப்பாக வரவேற்றனர். சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கான பட்ஜெட் தான், அனைத்து திட்டங்களின் வாயிலாக தமிழகமும் நலன் பெறும் என தெரிவித்தார். கடந்த முறையை காட்டிலும் நாட்டின் வளர்ச்சிக்காக ரயில்வே உட்பட பல்வேறு துறைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். 


அதே போல, ஒவ்வொரு மாநிலத்தின் முதலமைச்சர்களும் நிதிஆயோக் கூட்டத்தில் முறையாக பங்கேற்று, தங்களது மாநிலங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என கூறினார். ஆனால், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஜீரோ என திமுகவினர் குற்றம் சாட்டுவது அப்பட்டமான அரசியல் எனும், இதன் மூலம் தமிழக மக்களை திசை திருப்ப முயற்சிப்பதாக குற்றம் சாட்டியா அவர், தமிழக முதல்வர் இந்த போக்கினை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444....

No comments:

Post a Comment

Post Top Ad