அரசு பள்ளி கட்டிடங்கள் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது - அமைச்சர் காந்தி. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 1 August 2024

அரசு பள்ளி கட்டிடங்கள் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது - அமைச்சர் காந்தி.


வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகள் மேலும்10 மற்றும் 12-ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் பங்கேற்று இருந்தனர், இந்த நிகழ்ச்சியில் 76 பள்ளிகளை சேர்ந்த 986 மாணவ மாணவிகளுக்கு 4 கோடியே 37 லட்சத்து 68 ஆயிரத்து 340 ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது, மேலும் 835 பள்ளிகளை சேர்ந்த ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள 57 ஆயிரத்தி 536 மாணவ மாணவிகளுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பில் 100% தேர்ச்சி அளித்த தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது


இந்த நிகழ்வில் பேசிய கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தெரிவிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தனியார் பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்து அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார், அரசு பள்ளிகளில் என்னென்ன அடிப்படை தேவைகள் தேவை என்பதை உணர்ந்து அரசு செய்வதாக தெரிவித்தவர் பழைய கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு அரசு பள்ளி கட்டிடங்கள் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


கல்விக்காக அரசு அறிவிக்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகளை மாணவ மாணவிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியை கற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் மாணவ மாணவிகள் பெற்றோர்களை மறக்கக்கூடாது என உருக்கமாக பேசிய அமைச்சர் கடந்த பிறவியில் அதிக பாவம் செய்திருந்தால் அவர்களுக்கு ஆண் பிள்ளைகள் பிறக்கும் எனவும் அதிக புண்ணியம் செய்திருந்தால் பெண் பிள்ளைகள் பிறக்கும் என  மன உருக்கமாக பேசிய அமைச்சர் பெண்களின் முன்னேற்றம் என்பது குடும்பத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கு முன்னேற்றத்தை உண்டாக்க கூடியது என நிகழ்ச்சியாக பேசினார்.


- மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444. 

No comments:

Post a Comment

Post Top Ad