நெமிலியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் பெ. வடிவேலு பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 2 August 2024

நெமிலியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் பெ. வடிவேலு பங்கேற்பு!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொய்கைநல்லூர், மேலபுலம், நெடும்புலி, வேட்டாங்குளம், ரெட்டிவலம், அகவலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்கள் நெடும்புலி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்  நடைபெற்றது. 

இந்த முகாமிற்கு நெமிலி தாசில்தார். ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார், மாவட்ட வழங்கல் அலுவலர். ஏகாம்பரம் முன்னிலை வகித்தார் துணை தாசில்தார். பன்னீர்செல்வம் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு கலந்து கொண்டு மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மொத்தம் பல்வேறு துறைகளில் 558 மனுக்கள் பெறப்பட்டது. இதில் பிடிஓ-கள். தாஸ் பிரகாஷ், ரவிச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர். மாறன், விஏஓ. மணிகண்டன், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா 

No comments:

Post a Comment

Post Top Ad