இக்கூட்டத்திற்கு நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு தலைமை தாங்கினார். துணை தலைவர். தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள். தாஸ்பிரகாஷ், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த நெடும்புலி கிராம ஊராட்சியில் 400 ஏக்கர் பரப்பளவில் ரூ. 9000 கோடி மதிப்பில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது.
இதன் மூலம் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையை நெமிலி ஊராட்சி ஒன்றியம் நெடும்புலி கிராமத்தை தேர்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பனப்பாக்கத்தில் இருந்து உளியநல்லூர் வரை செல்லும் சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதனை சீரமைக்க ரூ. 3 கோடி மதிப்பில் பாலம் கட்டவும் ரூ. 2 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கவும் என மொத்தம் ரூ. 5 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மேலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் செய்யும்போது பிரதிநிதியான எங்களுக்கே எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை.
இனிமேலும் அதுபோல் இல்லாமல் மக்கள் பிரதிகளுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பிற துறையை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment