ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த வேட்டாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2 ஆண்டுக்கு ஒருமுறை பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான மறுகட்டமைப்பு கூட்டம் தலைமை ஆசிரியர். புவியரசு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது குறித்தும், பள்ளியில் குடிநீர், கழிப்பிட வசதி, கட்டிட வசதிகளை மேம்படுத்தி வரும் காலங்களில் மாணவர்களை அதிகமாக சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் உதவி ஆசிரியர். ரேகா நன்றி கூறினார்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment