இதனை பெற்று கொண்ட கருணாகரன் குடும்ப சொத்து இடம் இருக்கும் இடத்தில்வீட்டை கட்டிகொள்ளுங்கள் என தெரிவித்ததாகவும் தற்போது வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஞானசுந்தரி மற்றும் அவரது கணவர் சுப்பிரமணியன் டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்பி வந்த நிலையில் கருணாகரன் தற்போது கட்டி முடித்துள்ள வீடு தனக்கு சொந்தமானது என்றும் வாங்கிய 22 லட்சம் ரூபாய் பணத்தினை திருப்பிதர முடியாது எனவும் குடும்ப சொத்து உள்ள இடங்களை பிரித்து தர முடியாது எனவும் குடும்ப சொத்துக்களின் ஆவணங்களில் இருந்து ஞானசுந்தரி மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் பெயர்கள் நீக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் பிரச்சினை சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி அவர்களிடம் அளித்த புகாரின் அடிப்படையில் நில அபகரிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் இளவரசன் உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் போலீசார் தலைமையில் விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து தற்போது பண மோசடி, நிலம் அபகரிப்பு, வீடுமோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து கருணாகரனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
- மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
No comments:
Post a Comment