கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 9 August 2024

கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில்  ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி   இராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசாணை 33-ல் உரிய திருத்தம் மேற்கொண்டு தொடர்ந்து கருணை அடிப்படை பணிநியமனம் கிராம உதவியாளர்களுக்கு வழங்கவும் CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மற்றும் இறந்த கிராம உதவியாளர்களுக்கு CPS இறுதி தொகை மற்றும் கிராம உதவியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான காலமுறை ஊதியம் 15700/- வழங்கிடவும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக இணை ஆணையரின் உத்தரவுக்கு முரணாக, மாறாக கிராம உதவியாளர்களை வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பணி செய்ய கட்டாயப்படுத்துவதை முற்றிலும் கைவிடவும் உள்ளிட்ட ஏழு அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 13-ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad