பனப்பாக்கம் அருகே மேலபுலம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 10 August 2024

பனப்பாக்கம் அருகே மேலபுலம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலபுலம் புதூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் எஸ்.எம்.சி மறுக்கட்டமைப்பு தேர்தல் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் விநாயகம் வரவேற்றார். சிறப்பு பார்வையாளராக நெமிலி வட்டார கல்வி அலுவலர். மீனாட்சி, பார்வையாளராக கோபிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் நடத்தினர். 



நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பள்ளி ஆசிரியைகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எஸ்‌‌.எம்.சி தலைவராக மணிமேகலை, துணைத்தலைவராக ஹேமாவதி மற்றும் அனைத்து உறுப்பினர்களும் விதிமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad