நெமிலி அருகே மகேந்திரவாடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் சுந்தராம்பாள் பெருமாள் பங்கேற்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 August 2024

நெமிலி அருகே மகேந்திரவாடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் சுந்தராம்பாள் பெருமாள் பங்கேற்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகேந்திரவாடி ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைகினங்க, மகேந்திரவாடி ஊராட்சி மன்ற தலைவர் பி.பரணிக்குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்ட குழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் கலந்துகொண்டு கலைஞர் கனவு இல்லத்திற்கான ஆணை வழங்கியும், மக்களின் குறைகளை கேட்டறிந்தார். 


இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad