சொந்த இடமில்லை, தங்க வீடு இல்லை பாலியல் சிலிமிஷம், மனம் குமுறும் நரிக்குறவர்கள் ஆற்காட்டின் அவலம். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 23 August 2024

சொந்த இடமில்லை, தங்க வீடு இல்லை பாலியல் சிலிமிஷம், மனம் குமுறும் நரிக்குறவர்கள் ஆற்காட்டின் அவலம்.


சுமார் 40 வருடங்கலாக  28 குடும்பங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் ஆற்காடு பேருந்து நிலையத்திலுள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகில் வசித்து வருகின்றனர் ஊசிமணி பாசிமணி விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்  சொந்த இடமில்லை, தங்க வீடு இல்லை,வெயில், மழை, காற்று, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு  இன்னல்களை அனுபவித்து வருகிறன்ரனர். 

இம்மக்களின் (நாட்டாமை)  தலைவர் கடம்பன்  நம்மிடம் மனம் திறந்தார், ஆற்காடு பேருந்து நிலையத்தில் 6மணிக்கு மேல மது பிரியர்கள் குடித்துவிட்டு வந்து எங்கள் மீது கல்லெறிகின்றனர் இரவு நேரங்களில் பிரச்சனை செய்கின்றனர் படுத்து உறங்கும் போது எங்கள் கொசு வலைகளை கிழித்து விடுகின்றனர்.


மழை நேரங்களில் படுத்து உறங்க இடமில்லாததால்   கட்டிட தாவரங்களில் படுத்து உறங்கும்போது கடைக்காரர்கள்  எங்கள் மீது தண்ணீர் ஊற்றி எழுப்பி  துரத்துகின்றனர்  பேருந்து ஓட்டுநர்கள்  எங்கள் மீது  ஏற்றுவது போல  பயம் காட்டுகின்றனர் இரவிலும் பகலிலும் எங்களுக்கு என்ன நடக்குமோ? என்று பயந்து, பயந்து, வாழ்ந்து வருகின்றோம் என்றார். 


அரசு அதிகாரிகள் இடம் தந்து வீடு கட்டி தர பலமுறை  மனு கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை  கடைசியாக எங்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, அனைத்தையும் கலெக்டர் இடம் ஒப்படைத்துவிட்டு  மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என்றார். நரிக்குறவர்  பெண்கள் நம்மிடம் பேசினர்  மதுபான பிரியர்கள் இரவு நேரங்களில் குடித்து வந்து   பணம் தருகிறேன் படுக்கைக்கு  வாடி  என்று கூப்பிட்டு பாலியல் தொந்தரவு செய்கின்றனர்   குடிக்கவும், குளிக்கவும், தண்ணீர் இல்லை  உடை மாற்ற மறைவான இடமில்லை, காற்று மழையில மிகவும் கஷ்டப்படுகிறோம். எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க ஆசைதான் தங்குவதற்கு இடமில்லையென்று   கண் கலங்கினர் 


அதனைத் தொடர்ந்து பிஜேபி எஸ்.டி.மாநில செயற்குழு உறுப்பினர்  எஸ்.புருசோத்தமன்  மற்றும் ஆற்காடு நகர செயலாளர்  ஜி.டீகாராமன்  எங்களிடம் நரிக்குறவர்கள் படும் இன்னல்களை விவரித்தனர் ஆளும் கட்சியை சேர்ந்த அதிகாரிகள் நரிக்குறவர்களுக்கு இடம் தராமல்  வஞ்சிக்கிறார்கள், நூறு மனுக்கள் கொடுத்து வருடக்கணக்காக போராடி வருகின்றனர்  நிரந்தர இடம் தரவில்லை என்றவர்கள் பெண்கள்களுக்கு  பாதுகாப்பு இல்லை  10 கிலோமீட்டரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில்  இடம் தருவதாக சொல்கின்றனர்  ஆனாலும் இடம் கொடுத்த பாடில்லை  கலெக்டர், தாசில்தார் மாறிவிட்டார்கள்  


கொடுத்த மனு எங்கே போனது என்றே? தெரியவில்லை அரசு அதிகாரிகள்  நடவடிக்கை எடுத்து இடம் தர ஏற்பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆர்காடு டவுன் விஏஓ வெங்கட்டிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம் நரிக்குறவர்கள் குடியிருப்பதற்கு லாடபுரம், அத்தித்தாங்கல் ஆகிய  இரண்டு இடங்களை காண்பித்தோம் பஸ் வசதி இல்லாத காரணத்தினால் வேண்டாம் என்று சொல்லிவிட்டனர் தற்போது பஸ் வசதி உள்ள சக்கரமல்லூர் கிராமத்திலுள்ள இடத்தை தேர்ந்தெடுத்துள்ளோம் விரைவில் அவர்களுக்கு இடம் தர ஏற்பாடு செய்யப்படும் என்றார் 


அதனைத் தொடர்ந்து ஆற்காடு வட்டாட்சியரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது  அவசரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக கூறி அலைபேசியை துண்டித்து விட்டார் பூர்விக குடிகளான நரிக்குறவர்  மக்களுக்கும் மனிதர்கள் தான்  இவர்களின் நலனை விரும்ப வேண்டிய  அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருவது ஏன்? கேட்பாரற்று கிடப்பதால, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு இடம் தர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad