நெமிலியில் அதிமுகவினர் பாஜக தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை தீ வைத்து எரிப்பு! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 26 August 2024

நெமிலியில் அதிமுகவினர் பாஜக தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை தீ வைத்து எரிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை அவதூறாக பேசிய பாஜக மாநில தலைவர். அண்ணாமலையை கண்டித்து நெமிலி பேரூராட்சி அதிமுக சார்பில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி விஜயன் மற்றும் நெமிலி நகர செயலாளர். செல்வம் அவர்கள் தலைமையில் அண்ணாமலையின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். 


உடன் நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன், இளைஞர் அணி முருகன், வினோத்குமார், கணேஷ், டோமேஷ், சந்திரன், ஏழுமலை, சின்னதுரை, பிரவின் குமார், சுகுமார், சங்கர், பிரபு ஆகியோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து பனப்பாக்கத்தில் மணிவண்ணன் தலைமையில் அதிமுக-வினர் அண்ணாமலையின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.


- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad