நெமிலியில் பெ.வடிவேலு தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா !! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 15 September 2024

நெமிலியில் பெ.வடிவேலு தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா !!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் விழா நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ.வடிவேலு தலைமையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் அரக்கோணம் சாலையில் இருந்து நெமிலி பேருந்து நிலையம் வரை ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு ஒன்றிய குழு உறுப்பினர்கள். சரஸ்வதி, பார்த்திபன், கழக நிர்வாகிகள் அப்துல் நசீர், பாரதி, ஜெயச்சந்திரன், சங்கர், அரிகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad