ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ் ஜி சி பெருமாள் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரக்கோணம் சாலையில் இருந்து நெமிலி பேருந்து நிலையம் வரை ஒன்றிய செயலாளர் எஸ் ஜி சி பெருமாள் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா அண்ணாவின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்பு இனிப்பு மற்றும் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளருமான சுந்தராம்பாள் பெருமாள் நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர் செல்வம் ,நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர்கள் சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, மாவட்ட பிரதிநிதிகள் சம்பத், தணிகைவேல், சுற்றுச்சூழல் அமைப்பாளர் முரளி முகேஷ், மற்றும் திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் மு பிரகாசம் நெமிலி தாலுக்கா
No comments:
Post a Comment