பனப்பாக்கம் சிப்காட் தொழில் பேட்டையில் ரூ9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கட்டுமான பணிக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட. வருகையையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் காந்தி ஆய்வு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 15 September 2024

பனப்பாக்கம் சிப்காட் தொழில் பேட்டையில் ரூ9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கட்டுமான பணிக்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்ட. வருகையையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் காந்தி ஆய்வு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் எதிர்வரும் 28.09.2024 அன்று இராணிப்பேட்டை மாவட்டம்  நெமிலி ஒன்றியம்  பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள நெடும்புலி கிராமம் அருகில் அமைய உள்ள  சிப்காட் தொழில் பேட்டையில் ரூபாய் 9000 கோடி மதிப்பீட்டில்  அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவதையொட்டி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து சிப்காட் பகுதியில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி 14.09.2024 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும் இது தவிர ரூபாய் 400கோடி மதிப்பிலான காலனி பூங்கா அமைய உள்ளதாகவும் இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தமிழக முதல்வர் அவர்களால் உருவாக்கப்பட்டது வளர்ந்து வரும் மாவட்டங்களில் இராணிப்பேட்டை மாவட்டமும் இடம் பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார். 

 உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, இகாப மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை .பா. ஜெயசுதா, டாடா நிறுவன பொது மேலாளர்  முத்துக்குமார். சிப்காட் கண்காணிப்பு பொறியாளர் தேவபிரகாசம் உதவி பொது மேலாளர் அருண்குமார். நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் செல்வகுமார்,நெமிலி மத்திய ஒன்றிய குழு திமுக. செயலாளர்  எஸ்ஜிசி பெருமாள் நெமிலி  ஒன்றிய குழு தலைவர். பெ.வடிவேலு, வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ்  பனப்பாக்கம் பேரூராட்சி திமுக நகர செயலாளர் என்ஆர் சீனிவாசன்  மற்றும் அரசு அலுவலர்கள்  பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர். மு.பிரகாசம்
 நெமிலி தாலுக்கா

No comments:

Post a Comment

Post Top Ad