நெமிலி புன்னை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சப்த மாதா அருள்மிகு ஸ்ரீபொன்னியம்மன் அருள்மிகு ஸ்ரீ ஆலங்கொடி அம்மன் ஆலய அஸ்தபன மகா கும்பாபிஷேக விழா !! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 September 2024

நெமிலி புன்னை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சப்த மாதா அருள்மிகு ஸ்ரீபொன்னியம்மன் அருள்மிகு ஸ்ரீ ஆலங்கொடி அம்மன் ஆலய அஸ்தபன மகா கும்பாபிஷேக விழா !!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் புன்னை  கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சப்த மாதா அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் அருள்மிகு ஸ்ரீ ஆலங்கொடி அம்மன் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
 

இந்த கும்பாபிஷேக விழா ஆவணி 30- 15/09/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11மணிக்கு பந்தகால் நடுதல் 102மணிக்கு பூர்வாங்க பூஜைகள்விக்னேஸ்வர அணுக்ஞை புண்ணியாக வாசகம் ஸ்ரீ மகா கணபதி ஹோமம் அதனை தொடர்ந்து மகா தீப ஆராதனை மாலை 4 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி பிரவேச பலி விக்கிரக கண் திறப்பு கோ பூஜை கலா கரிசனம் சோம கும்ப பூஜை மற்றும் துவார பூஜைகள் ரக்ஷயா பந்தனம் (காப்பு கட்டுதல்) மிருது சங்கரனம் புற்று மண் எடுத்து வருதல் யாகசாலை பிரவேசம் கும்ப பூஜை மூல மந்திரம் மகா புனர்ஹதி தீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.


நேற்று ஆவணி 31 16/9/2024 திங்கட்கிழமை காலை 6:30 -7 மணிக்குள்ளாக மங்கல இசை 7 மணிக்கு மேல் தம்பதியர் பூஜை கணபதி ஹோமம் தத்துவர்களை நாடி சந்தானம் 7.30 மணிக்கு மேல் மகா கணபதி ஓமம் மூல மந்திரம் மாதா மந்திரம் கணபதி சூத்தம் உபநிஷத்) துர்க்கை சூத்தம் ஸ்ரீ சூக்தம் சாந்தி பஞ்சகம் பாராயணம் 9மணிக்கு மேல்  கலச புறப்பாடு யாத்ராதானம் விமான கும்பாபிஷேகம் அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் அருள்மிகு ஸ்ரீ ஆலங்கொடி அம்மன் ஆலயம் பரிவார சப்த கன்னிகளுக்கு கும்பாபிஷேக நன்னீராட்டு பெரு சாந்தி திருவிழா நடைபெற்றது காலை 10 மணிக்கு மகா அபிஷேகம் அலங்காரம் தீபா ஆராதனை அன்னதானம் வழங்குதல் நிகழ்வு  நடைபெற்றது.


இந்நிகழ்வினைத்  தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு வானவேடிக்கை கேரள மேலத்துடன் அருள்மிகு ஸ்ரீ சப்த மாதா அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சி முடிவில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் மற்றும்  நெமிலி வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் விழாவில் கலந்து கொண்டார்கள் அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக பூரணகும்பம் மரியாதை அளிக்கப்பட்டது ஏ பி கே நந்தகுமார் நெமிலி ஒன்றிய தலைவர் நகர செயலாளர் வேலு  பொருளாளர் ரவி அருண் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 


விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழா குழுவின் சார்பாக ஊர் மக்கள் சார்பாகவும்  நன்றி தெரிவித்தனர்.


- செய்தியாளர்.மு.பிரகாசம் நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad