!ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஸ்ரீ ஜோதி லிங்கேஸ்வரர் சிவனடியார் சேவா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக பௌர்ணமி முன்னிட்டு 12 ஆம் மாத அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ஜெய்மாருதி சரவணன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக டிரஸ்டின் கௌரவ தலைவர் கணேஷ் மற்றும் வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் பொன். கு. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்து சிறப்பித்தனர் இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அன்னதான நிகழ்ச்சி துவங்கப்பட்டது இதில் டிரஸ்ட் நிர்வாகிகள் பொதுமக்கள் சிவனடியார்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் மு பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment