சோளிங்கரில் கேப்டன் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் தேமுதிக கட்சியின் இருபதாம் ஆண்டு தொடக்கவிழா விஜயபிரபாகரன் பங்கேற்பு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 22 September 2024

சோளிங்கரில் கேப்டன் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் தேமுதிக கட்சியின் இருபதாம் ஆண்டு தொடக்கவிழா விஜயபிரபாகரன் பங்கேற்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் தேமுதிக கட்சியின் 20ஆம் ஆண்டு துவக்க விழா ராணிப்பேட்டை மாவட்ட தேமுதிக செயலாளரும் சோளிங்கர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி ஆர் மனோகரன் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் காசிநாதன் மாவட்ட பொருளாளர் அசோகன் முன்னிலையில் சோளிங்கர் நகர செயலாளர் ரகு வரவேற்பில் தேமுதிகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக விஜயபிரபாகரன் அவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார் இதில் உயர்மட்ட குழு உறுப்பினர் சேகர் மாநில இளைஞரணி துணை செயலாளர் மகேந்திரன் மாநில தொண்டரணி துணைச் செயலாளர் எஸ் எஸ் தினகரன் ராணிப்பேட்டை ஜஸ்டின் பிரபாகரன் ஆற்காடு பிரபு சோளிங்கர் மாலிக் பாஷா அரக்கோணம் ஜானகிராமன் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் வினோத்குமார் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் விநாயகம் பனப்பாக்கம் நகர செயலாளர் காசி  பனப்பாக்கம் நகர துணை செயலாளர் யுவராஜ் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
 

- செய்தியாளர் மு பிரகாசம் நெமிலி தாலுகா.

No comments:

Post a Comment

Post Top Ad