வாலாஜா பாலாறு அணைக்கட்டு தடுப்பணை பணிகள் குறித்து அமைச்சர் ஆர். காந்தி ஆய்வு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 22 September 2024

வாலாஜா பாலாறு அணைக்கட்டு தடுப்பணை பணிகள் குறித்து அமைச்சர் ஆர். காந்தி ஆய்வு.

ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி நேற்று (21.09.2024) வாலாஜா பாலாறு அணைக்கட்டு தடுப்பணை நீர்வளத் துறையின் சார்பில் ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து. பாலாறு அணைக்கட்டினை பார்வையிட்டு பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்தார்கள்.

இந்த நிகழ்வின்போது  ராணிப்பேட்டை  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்  ஜெயந்தி திருமூர்த்தி. நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், செயற்பொறியாளர் பிரபாகர், உதவி செயற்பொறியாளர் சந்திரன். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வெங்கட்ரமணன். புவனேஸ்வரி சத்தியநாதன். வேல்முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

- செய்தியாளர்.மு.பிரகாசம்.நெமிலிதாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad