இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் 470 ஏக்கர் பரப்பளவில் 15 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் நெமிலி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான. ஜெயந்தி திருமூர்த்தி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு, நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment