ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் எதிர்வரும் 28.09.2024 அன்று பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவன அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து சிப்காட் பகுதியில் மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு அவர்கள் நேற்று (25.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா. இ.ஆ.ப.. மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ். நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ், கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணசாமி, வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா. வட்டாட்சியர் ஜெய்பிரகாஷ் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர். பிரகாசம்.நெமிலிதாலுகா
No comments:
Post a Comment