ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (28.09.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர். துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பிபராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், கழக சுற்றுச்சூழல் அணி மாநிலத் துணைச் செயலாளர் ஆர். வினோத் காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம். முனிரத்தினம், ஜெ.எல். ஈஸ்வரப்பன், பி. கார்த்திகேயன், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய் இ.ஆ.ப, சிப்காட் மேலாண்மை இயக்குநர் டாக்டர் கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப, வழிகாட்டி நிறுனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு இ.ஆ, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப. டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பி.பி பாலாஜி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர். சைலேஷ் சந்திரா, ஜெ.எல்.ஆர் நிறுவனத்தின் இயக்குநர். ஃப்ராங்க் வட்விக், ஜி.கே.குழுமம். சந்தோஷ்காந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா
No comments:
Post a Comment