நெமிலியில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதை முன்னிட்டு எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!  - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 29 September 2024

நெமிலியில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதை முன்னிட்டு எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்! 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றத்தை முன்னிட்டு நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.பி ரவீந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 


இந்நிகழ்வில் அரக்கோணம் சாலையில் இருந்து நெமிலி பேருந்து நிலையம் வரை ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி‌‌.சி பெருமாள் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாக சென்று தந்தை பெரியார், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றத்தை கொண்டாடினர். 


இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள், பொருளாளர். செல்வம், ஒன்றிய துணை செயலாளர்கள். சீனிவாசன், வெங்கடேசன், சரளா முரளி, மாவட்ட பிரதிநிதி. சம்பத், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர். ரவி, நெமிலி மேற்கு ஒன்றிய பொருளாளர். பிரகாஷ், ஏரி பாசன சங்க தலைவர். நந்தன், நெமிலி மத்திய ஒன்றிய இளைஞரணி. எல்லப்பன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர்கள். முரளி முகேஷ், ஸ்டாலின், நட்பு நவீன், ராஜேஷ், வில்வநாதன், திமுக கழக நிர்வாகி. பூக்கடை சண்முகம் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.


செய்தியாளர் பிரகாசம் 
நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad