ராணிப்பேட்டையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண்
குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்து பத்திரிக்கை, தொலைக்காட்சி, ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா, தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்து பத்திரிக்கை / தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களின் குரலாகவும், சமுதாயத்தின் தூண்கள் போன்று செயல்படுகின்ற பத்திரிக்கைத் துறையினர் பெண் குழந்தைகளை பாதுகாப்பதிலும், பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் முக்கியதுவம் கொடுக்க வேண்டும். இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்து பத்திரிக்கை / தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டத்தில் தெரிவித்ததாவது, பத்திரிக்கை / தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் சமுதாயத்தில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் என்ன? மக்களின் தேவைகள் என்ன? சமுதாயத்தில் என்ன பிரச்சனைகள் நடக்கின்றது? என்பதை அரசிற்கு தெரிவிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
ஆகவே பொதுமக்களின் குரலாகவும், சமுதாயத்தின் தூண்கள் போன்று செயல்படுகின்ற பத்திரிக்கைத் துறையினர் பெண் குழந்தைகளை பாதுகாப்பதிலும், பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சமுதாயத்தில் எங்கு தவறு நடந்தாலும் அதனை பொதுமக்களுக்கு சுட்டி காட்டுவதுபோல் கருவிலேயே SCAN மூலம் பெண் குழந்தைகளை கண்டறிவது, பெண் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல், வன்கொடுமை உள்ளிட்ட பல பிரச்சினைகளில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க முக்கியத்துவம் தர வேண்டும். இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்னவெனில் பெண் குழந்தைகளை தாயின் கருவிலேருந்து பாதுகாப்பது மற்றும் பிறந்த குழந்தைகளை பேணிக்காத்து கற்பிப்பது ஆகும்.
நமது மாவட்டத்தில் 80க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற SCAN மையங்கள் உள்ளது. அரசின் பதிவு பெறாத SCAN மையங்கள் செயல்பட்டு வந்தாலோ அல்லது தாயின் வயிற்றிலேயே பெண் குழந்தைகளை கண்டறியப்படுவதாக தெரிய வந்தாலோ அது குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கிடுங்கள்.
பின்னர் சம்மந்தப்பட்ட SCAN மையங்கள் மீது உரிய மேற்கொள்ளப்படும். நடவடிக்கை கடந்த ஆண்டில், சராசரியாக பெண் குழந்தைகள் பிறப்பு விகிதமானது 930 ஆக இருந்தது. இது மாநில சராசரியான 941 னை விட குறைவாக உள்ளது. நமது மாவட்டத்தில் ஆற்காடு மற்றும் சோளிங்கர் வட்டாரங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து காணப்படுகிறது. ஆகவே இது குறித்து சம்மந்தப்பட்ட வட்டாரங்களில் சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத்துறை மூலம் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோன்று இளம் வயதில் பெண் குழந்தைகள் திருமணம் நடைபெறுகிறது. இதனால் கருவுரும் டீனேஜ் பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தைகள் 2.50 கி.கி க்கும் குறைவாக எடை குறைபாட்டுடன் பிறக்கின்றது. அக்குழந்தைகளை காப்பாற்றுவது கடினமாகிறது. இது குறித்தும் பல்வேறு துறைகளின் சார்பில் விழிப்புணர்வுகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்படி, நடைபெறும் குற்ற நிகழ்வுகளில் உள்ள பிரச்சனைகள், தண்டனைகள், என்னென்ன சட்டங்களின் கீழ் வழக்குகள் பதியப்படும் என்பது குறித்து இப்பயிற்சி வகுப்பில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். உங்களுக்குள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதில் ஊடகவியலாளர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆகவே நீங்கள் அனைவரும் பெண் குழந்தைகளை பாதுகாப்பதில் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள். தொடர்ந்து, காவல்துறை, நீதித் துறை, மருத்துவத்துறை, சமூக நலன் துறை
சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நலன் அலுவலர் வசந்தி ஆனந்தன் (பொறுப்பு), துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரலேகா,(பயிற்சி) இலவச சட்ட உதவி & சமரச மையம் குழ வழக்கறிஞர் M. சங்கரன், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் செ.அசோக், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உதவி திட்ட திட்ட அலுவலர் மரு. கோமதி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி தா.மலர்விழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்டசெய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444...
No comments:
Post a Comment