நீட் தேர்வில் வெற்றி பெற்று சு.ரவி எம்எல்ஏ- வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பனப்பாக்கம் அரசு பள்ளி மாணவி சோனா! - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 4 September 2024

நீட் தேர்வில் வெற்றி பெற்று சு.ரவி எம்எல்ஏ- வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பனப்பாக்கம் அரசு பள்ளி மாணவி சோனா!

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், பெருவளையம் கிராமத்தை சேர்ந்த அ.முனுசாமி, சுமதி இவர்களது மகள் சோனா பனப்பாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று 532 மதிப்பெண்கள் பெற்றார். 


மேலும் நீட் பரிட்சையில் 455 மதிப்பெண் பெற்று, தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் கொண்டு வந்த 7.5% இட ஒதுக்கீட்டில் திருவள்ளூர், இந்திரா மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க அனுமதி கிடைத்துள்ளது. 


இவர் இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்எல்ஏ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


- செய்தியாளர் பிரகாசம்  நெமிலி தாலுகா

No comments:

Post a Comment

Post Top Ad