ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த அகவலம் கிராமத்தில் புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனத் தலைவர் மறைந்த பூவை மூர்த்தியின் நினைவு நாள் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் டி. செல்வம் தலைமையில் மாவீரர் தினமாக அனுசரிக்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் செயலாளர். செல்லா அவர்கள் கலந்துகொண்டு அகவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சிலை நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கினார். இதில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பி.டி மூர்த்தி, ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர் அணி தலைவர் எஸ்.வசந்த் மற்றும் புரட்சி பாரத நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment