ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர். புருஷோத்தமன் தலைமையில், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளரும், சயனபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான. பவானி வடிவேலு முன்னிலையில், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு வரவேற்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்கள் கலந்துகொண்டு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நெமிலி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைக் கழக நிர்வாகிகளுக்கும் பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்தார்.
இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் ஆர்.வினோத் காந்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினருமான ஜெ.எல் ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே சுந்தர் மூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள். கண்ணையன், அசோகன், மாவட்ட துணை செயலாளர்கள். சிவானந்தம், துரைமஸ்தான், ஒன்றிய குழு உறுப்பினர்கள். சரஸ்வதி பார்த்திபன், கழக நிர்வாகிகள். அப்துல் நசீர், பாரதி, ஜெயச்சந்திரன், சங்கர், அரிகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர். பாண்டியன் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment