ஆனால் அவர் விதிமுறைகள் மீறி ஆரணி ஆற்காடு நெடுஞ்சாலையில் விவசாயி பயன்பாட்டிற்கு இல்லாத திருமண மண்டபம் கட்டுவதற்கு சுமார் 10 டேக்டர்களில் மண் எடுத்து சென்று கொண்டிருந்தனர். மேற்படி இடத்தை பொதுமக்களுடன் சென்று பார்த்த போது அதிகாரிகள் யாரும் இல்லை, மண் அளவீடு செய்து பர்மிட் போடுவதற்கு அரசு ஊழியர்கள் யாரும் இல்லாமல் எடுத்து சென்று கொண்டிருந்தனர். இந்த தகவலை நான் வட்டாச்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் தகவல் தெரிவித்தேன். சிறிது நேரத்தில், தகவல் அறிந்த வட்டாச்சியர் கிராம நிர்வாக அலுவலர், மற்றும் வருவாய் ஆய்வாளர், ஆய்வு செய்தனர் முறைகேடாக மண் எடுத்து சென்றவர்களை தடுத்து நிறுத்தினர். இது சம்பந்தமாக அனுமதி இல்லாமல் மண் எடுத்து சென்றவர்கள் ஒன்று கூடி, சுமார், 3 1/2 pm மணி அளவில் திமிரி பாத்திகாரன்பட்டியில் உள்ள என்னுடைய அலுவலகத்தில் நின்று கொண்டு இருக்கும் போது சுமார் 5 க்கும் மேற்பட்ட நபர்கள் வந்து என்னை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த சம்பவத்தை நான், திமிரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தேன். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதி இல்லாத வாகனங்களை (மண் எடுத்து சென்ற வாகனங்களை) பறிமுதல் செய்து மண் திருட்டுக்கு துணை போன அணைத்து நபர்கள் மீதும் விசாரனை செய்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு பத்துரூபாய் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment