நாடக கலைஞர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியரிடம் மனு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 September 2024

நாடக கலைஞர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியரிடம் மனு.


ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுபுற கலைஞர்கள் நலச்சங்கம் மாநில குழு உறுப்பினரும், மண்டல தலைவருமான பெ. கலைச்செல்வன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வரும் நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள்  கடந்த 5.02.2024 அன்று அரசு வழங்கும் இலவச வீட்டுமனை வேண்டி மனு கொடுத்திருந்தோம் இதனடிபயடையில் மாவட்ட ஆட்சியரிடமிருந்து கடிதம் வந்துள்ளது. 

இருப்பினும் வீட்டுமனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை மக்கள் மத்தியில் பறைசாற்றி வரும் நாடக மற்றும் நாட்டுப்புற நலிந்த கலைஞர்களாகிய எங்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச விட்டுமனை வழங்க ஆவண செய்யவேண்டுமாய் மிகவும் பணிவண்புடன் கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad