ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கோவிந்தச்சேரிகுப்பம் ஆதி திராவிட குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது கோவிந்தசேரி குப்பம் ஆதிதிராவிடர் பகுதிக்கு செல்லும் வழி சர்வே எண் 461 கொண்ட பொதுமக்கள் பயன்படுத்தி வந்த அரசுக்கு சொந்தமான இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த லேட் சின்னதுரை என்பவர்களின் மகன்கள், புகேந்திரன், பிச்சாண்டி ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கேட்கும் பொதுமக்களை மேற்கண்ட நபர்கள் தகாத வார்த்தைகளைப் பேசி, மிரட்டி அச்சுறுத்தல் செய்து வருகின்றனர் மேலும் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடம் யூடிஆர் மூலமாக பட்டாவும் மாறி உள்ளது எனவே வெகுகாலமாக பொதுமக்கள் பயன்படுத்தி வரும் அந்த இடத்துக்குரிய பட்டாவை ரத்து செய்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment