எல்லாருக்கும்மான சமத்துவ விளையாட்டுத்திடல் ஏ.வி.எஸ் சாரதி புதிய விளையாட்டு திடலை திறந்து வைத்து பேச்சு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 September 2024

எல்லாருக்கும்மான சமத்துவ விளையாட்டுத்திடல் ஏ.வி.எஸ் சாரதி புதிய விளையாட்டு திடலை திறந்து வைத்து பேச்சு.


ஆற்காடு செய்யாறு சாலை அருகே இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய கைப்பந்து விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது, இத்திடலை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு   திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் ஏ.வி.சாரதி தலைமை தாங்கினார், ரத்தினகிரி பாலமுருகன் அடிகளார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி  திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து ஏ.வி சாரதி  சிறப்புரையாற்றினார்.

அவர் பேசிய போது 20 ஏக்கர் நிலத்தில் வாலிபால் மற்றும் கிரிக்கெட் கிரவுண்ட்  அமைத்து தர வேண்டுமென விருப்பம் இருந்தது வேலை சுமை காரணமாக செய்து தர முடியவில்லை வாலிபால் பிளேயர் சரவணன் அடிக்கடி வந்து என்னிடத்தில் மாணவர்களின் விளையாட்டு திறன்களை பற்றி பேசுவார், அவரின் சீரிய முயற்சியால்  இந்த விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது  முக்கியமாக நான் சொல்ல விரும்புவது  ஏ வி சாரதிக்கு பதில் 100 ஏவி சாரதிகள் உருவாக்க வேண்டும் என்பதல்ல, சரவணனுக்கு பதிலாக நூறு திறமையான பிளேயர்கள் உருவாக வேண்டும் குறிப்பாக நமது மாவட்டம் மற்றும் நமது தொகுதியிலிருந்து  இன்கம் டேக்ஸ், ரயில்வே, வங்கிகள் போன்ற பல்வேறு துறைகளுக்கு மாணவர்கள்  வேலைக்கு செல்ல வேண்டுமென  கூறினார்.


இந்த விளையாட்டுதிடல் சாதி, மதம் எவ்வித பாகுபாடு இல்லாமல்  எல்லாருக்கும் சமத்துவமானது எல்லா மாணவர்களும் இதனை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமென்றார் மேலும் அவர் பேசும் போது ஆற்காடு ஹவுசிங் போர்டு அருகே ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் கிரிக்கெட் கிரௌண்ட் தயாராகிக் கொண்டிருக்கிறது.


இன்னும் இரண்டு மாதத்தில் அதனை திறந்து வைக்க உள்ளோம் என்றார் தொடர் நிகழ்ச்சியாக ஏ.வி சாரதி, பாலமுருகன் அடிகளார், மாவட்ட விளையாட்டுதுறை அதிகாரி ச.ஞானசேகரன், மாவட்ட உடற்பயிற்சி ஆய்வாளர் செந்தில்குமார்  ஆகியோர்  மாணவர்களுக்கான விளையாட்டு  போட்டியினை துவக்கி வைத்தனர்,இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 28 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

 

இதில் ராணிப்பேட்டை மாவட்ட யங்ஸ்டர்ஸ் டெவலப்பர்ஸ் வாலிபால் கிளப் இளைஞர்கள்,ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன்,நகர மன்ற உறுப்பினர்  ராஜலட்சுமிதுரை   உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad