எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல். - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 1 September 2024

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், கொடைக்கல் ஊராட்சிக்குட்பட்ட பெருங்காஞ்சி கிராமத்தில் கல்லூரி மாணவன் பட்டியலினத்தை சேர்ந்த கதிர்வேல் அதே பகுதியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலிக்க கடந்த திங்களன்று (ஆக. 19) சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டதற்கு க்கு, இந்த வன்செயலில் ஈடுபட்டவர்கள் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் பி. ரகுபதி தலைமையில் சனிக்கிழமையன்று (ஆக. 31) முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் கட்சியின் வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர். மணிகண்டன், கலவை தாலுகா குழு செயலாளர் எஸ். கிட்டு முன்னிலை வகித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், கட்சி மாவட்ட செயலாளர் என். காசிநாதன், தீ.ஒ.முன்னணி மாநில துணைச் செயலாளர் பா. செல்வன், மாவட்ட செயலாளர் எபிஎம். சீனிவாசன், வேலூர் மாவட்ட செயலாளர் வி, குபேந்திரன் கண்டன உரையாற்றினார்கள்.


உடன் கதிர்வேலின் தந்தை நரசிம்மன், தாய் மகேஸ்வரி, தீ.ஒ.மு மாவட்ட பொருளாளர் டி. மோகன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஆ. தவராஜ், வி.தொ.ச மாவட்ட தலைவர் டி. சந்திரன், வி.ச மாவட்ட செயலாளர் எல்சி. மணி, வி.ச மாவட்ட பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், லிக்காய் பொதுச் செயலாளர் தா. வெங்கடேசன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கலைவாணன், துப்புரவு மாவட்ட செயலாளர் பி. கே கோதண்டபாணி, கட்டுமானம் மாவட்ட தலைவர் என். ரமேஷ், ஆட்டோ சங்கம் மாவட்ட தலைவர் மணி, செயலாளர் கேகேவி பாபு, பொருளாளர் ரமேஷ், போக்குவரத்து மண்டல செயலாளர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் மருதன் உள்ளிட்ட ஏராளமான கலந்துகொண்டு கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர்.


-  மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே: சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

No comments:

Post a Comment

Post Top Ad