ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மேற்கு ஒன்றியம் நெமிலி பேரூர் பனப்பாக்கம் பேரூர் சார்பில் அஅதிமுகழக வளர்ச்சி பணிகள் குறித்து 2026 மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றி அதிமுக வெற்றி வாகை சூடிட வியூகம் குறித்தும் ஒன்றிய பேரூர் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மேல் புலம்புதூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் சிதம்பரம் ஒன்றிய கழக அவைத் தலைவர் மேலும் கூட்டத்திற்கு வரவேற்பை நிகழ்த்தினார்கள் கே வி ஆர் அருணாபதி நெமிலி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே செல்வம் நெமிலி நகர கழக செயலாளர் கே மணிவண்ணன் பனப்பாக்கம் நகர கழக செயலாளர் இதனைத் தொடர்ந்து நெமிலி மேற்கு ஒன்றியகழக நிர்வாகி முன்னிலை வகித்தனர்.
மேலும் ஜி சம்பத் சோளிங்கர் எக்ஸ் எம்எல்ஏ பன்னீர்செல்வம் மா அதுசெ மான்மல் வர்த்தக அணி துணை செயலாளர் சியாம்குமார் கழக இளைஞர் அணி பாசறை செயலாளர் என் டி பி தயாளன் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் ஆலோசனை வழங்கினார்கள்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கே சி வீரமணி முன்னாள் அமைச்சர் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் மற்றும் சு ரவி ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை கொறடா இவர்கள் பேசியதாவது 2026 அதிமுக ஆட்சி பிடிப்பது கழக உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய. நகர பேரூர் ஊராட்சி கிளை செயலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியுரை ஆற்றினார் கே மனோகரன் நெமிலி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஒன்றிய குழு உறுப்பினர்.
- செய்தியாளர் மு.பிரகாசம் நெமிலி தாலுகா.
No comments:
Post a Comment