ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் அதிமுகவின் 53ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பனப்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் பனப்பாக்கம் நகர அவைத் தலைவர் பழனியாண்டி தலைமையில் இராணிப்பேட்டை மாவட்ட அதிமுக துணை செயலாளர். என்.டி.பி.தயாளன் முன்னிலையில் பனப்பாக்கம் நகர பொருளாளர் பாலு வரவேற்பில் அதிமுகவினர் பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் அவர்களது திருவுரு சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் பனப்பாக்கம் நகர செயலாளர். கருணா முன்னாள் நகர செயலாளர். முனுசாமி நகர துணை செயலாளர். மாணிக்கம் வட்ட செயலாளர். பலராமன் முன்னாள் நகர செயலாளர். பாலசுந்தரம் மாவட்ட விசைத்தறிவு பிரிவு செயலாளர். மணிவண்ணன் நிர்வாகிகள் வாசு, சூர்யா மற்றும் அதிமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர். மு.பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment