சாத்தூர் ஊராட்சியில் அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனை பிரிவு; சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர் அறிவிப்பு. - தமிழக குரல் - இராணிப்பேட்டை.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 12 October 2024

சாத்தூர் ஊராட்சியில் அரசு அனுமதி பெறாமல் வீட்டுமனை பிரிவு; சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர் அறிவிப்பு.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் சாத்தூர்  ஊராட்சி மன்ற தலைவர் சா.மா.சேட்டு ஆற்காட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் பேசியதாவது, வி.கே. மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் த/பெ சுப்பிரமணி இவர்  லப்பபேட்டை கிராமம் களர் ரோடு கிறிஸ்தவ திருச்சபை அருகில் சர்வே எண் 226 இல் உள்ள அவருக்கு சொந்தமான  இடத்தை வீட்டுமனை பிரிவுகள் செய்துள்ளார்.

இந்த இடத்திற்கு ஊராட்சி அனுமதி மற்றும் DTCP அனுமதி பெறவில்லை. அனுமதி பெறாமலேயே  அதே இடத்தில்  கட்டிம் கட்டி    மின்னிணைப்பும் பெற்றுள்ளார்.  (பிரிவு 110 AA 242 மற்றும்242/2) அரசாணை நிலை எண் 255 இன் படி சட்டத்திற்கு விரோதமான செயலாகும். எனவே கார்த்திக் என்பவருக்கு கடிதம் மூலம் தகவல் அனுப்பியுள்ளேன், ஏழு நாட்களுக்குள் அவர் பதில் அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளேன், தவறும் பட்சத்தில் தமிழ்நாடு ஊராட்சி சட்டப்பிரிவு 1994- இன்படி  ஊராட்சி மன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad