ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை என்.எஸ்.எஸ் 4 ஆம் நாள் முகாம் நடைப்பெற்றது. இதில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் பள்ளியின் தலைமை ஆசிரியர். சரளாதேவி தலைமையில் நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உதவி காவல் ஆய்வாளர். மூர்த்தி, நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் கலந்து கொண்டு மாணவர்களிடத்தில் போதைப் பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களிடத்தில் கலந்துரையாடினர.
இந்நிகழ்வில் தலைமை காவலர். தனசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். ரவி, பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர். சுகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர். வேலு, வழக்கறிஞர். ராஜேஷ், சதீஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment