ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் கீழ்களத்தூர் கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எம்.வி குமார் அவர்களின் தலைமையில், ஊராட்சி மன்ற துணை தலைவர். தேவி விஜயகுமார் ஒன்றிய பற்றாளர். ஜெயந்தி முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி குழு உறுப்பினரும், மாவட்ட திட்டகுழு உறுப்பினருமான. சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் கலந்துக்கொண்டு குறைகளை கேட்டறிந்து தீர்மானங்கள் நிறைவேற்றினார்.
குடிநீர் வசதி, சாலைவசதி, சுடுகாடு பாதை சீரமைப்பு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி போன்ற ஊரக வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். வெங்கடேசன், வேளாண்மை உதவி அலுவலர். செந்தில், கிராம நிர்வாக அலுவலர். ஆனந்தராஜ், ஊராட்சி செயலாளர். சுரேஷ், நெமிலி மத்திய ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர். முரளி முக்கேஷ், சதீஷ், கழக நிர்வாகிகள். சிவராமன், இளங்கோ, கார்த்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொது மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment