ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாமில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்வில் அவை;
- தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ரூ.25.40 இலட்சம் மதிப்பீட்டில், 10 கிராம ஊராட்சிகளில் குப்பைகளை எடுத்துச் செல்லும் 10 மின்கல வாகனங்களை தொடங்கி வைத்தல்,
- செல்வமந்தை ஊராட்சியில் ரூ.31.46 இலட்சம் மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா,
- உளியநல்லூர் ஊராட்சியில் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா,
- வேளியநல்லூர் ஊராட்சியில் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேநீர் தேக்கத் தொட்டி திறப்பு விழா!
மேற்காணும் முடிவுற்ற திட்டப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களும், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர், முனைவர், ஜெ.யு.சந்திரகலா அவர்களும், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம் முனிரத்தினம் அவர்களும் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஜி.சி பெருமாள், ஆர்.பி ரவீந்திரன், அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் பிரகாசம் நெமிலி தாலுகா
No comments:
Post a Comment