ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா,பனப்பாக்கம் அடுத்த நல்லூர்பேட்டை பகுதியில் ஸ்ரீ மதனாந்தக நல்லீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். மேலும் நாயன்மார்கள் பலர் வழிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகும்.
இந்த கோயிலை செங்குந்தர் சமுதாயத்தினர் காலம் காலமாக நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கோயிலுக்கு சொந்தமான சர்வே எண். 66,67,68 உள்ளிட்ட பட்டா நிலங்களில் சில மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கோணிப்பை மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளையடித்து வருகின்றனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர், எஸ்பி, சப்-கலெக்டர், தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நேரில் சென்று மனு கொடுத்து மணல் கடத்தலை தடுக்கும்படி மனு கொடுத்தனர்.
ஆனால் இதுநாள் வரை எந்த அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. இது குறித்து கோயில் நிர்வாகி ஒருவர் கூறியதாவது, கோயிலுக்கு சொந்தமான பட்டா இடத்தில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கோணிப்பை மற்றும் சிமென்ட் பைகளில் மணல் கடத்தி விற்பனை செய்கின்றனர். இந்த மணல் கடத்தலை தடுப்பதற்கு எஸ்பியிடம் புகார் கொடுத்தும், இதுநாள் வரை தடுக்கவில்லை. தொடர்ந்து மணல் அள்ளுவதால் அருகே உள்ள விவசாய நிலங்கள் பெரிதும் பாதிப்படைகிறது.
ஜமாபந்தி, மக்களுடன் முதல்வர், உங்கள் ஊரில் உங்களை தேடி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு முகாம்களில் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மணல் கடத்தலை தடுக்கவில்லை என்றால் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என அவர் கூறினார்.
- செய்தியாளர். மு.பிரகாசம்
No comments:
Post a Comment