ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் சிறுவளையம், பெருவளையம், புதுப்பட்டு, கர்ணாவூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் நேற்று அதிகாலை 1 மணி அளவில் தனியார் கம்பெனி பஸ்ஸில் புதுப்பட்டு கர்ணாவூர் பகுதிகளை சேர்ந்த 18 பெண்கள் 13 ஆண்கள் என மொத்தம் 31 பேர் தங்கள் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது பஸ் சிறுவளையம் லட்சுமிபுரம் அருகே வரும்போது எதிர்பாராத விதமாக அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் இருந்த அனைத்து தொழிலாளர்களும் லேசான காயத்துடன் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ் டிரைவர் குமரேசன் (28) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர். மு.பிரகாசம். நெமிலி தாலுக்கா
No comments:
Post a Comment