இதில் சிறப்பு விருந்தினராக ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏ.வுமான. சு. ரவி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் திமுக ஆட்சி வந்தது நான்காண்டுகள் நெருங்கிவிட்ட நிலையில் ஒரு திட்டத்தை கூட உருப்படியாக நிறைவேற்ற வில்லை. தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற முதல்வர். ஸ்டாலின் கூறிவிட்டு தீபாவளிக்கு டார்கெட் வைத்து மது விற்பனை செய்வது வெட்கக்கே வெட்கக்கேடானது.
அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் நாலு முறை தேர்ந்தெடுக்கப்பட்டும் இதுவரை அரக்கோணம் தொகுதிக்கு எம்பி அலுவலகம் இல்லை. அவர் தேர்தல் நேரத்தில் மட்டும் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து வெற்றி பெற்றார். மேலும் அரக்கோணம் லோக்சபா தொகுதி உட்பட அனைத்து தொழில்களிலும் பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வருவேன் என்று கூறினார்.அதற்கான முதற்கட்ட வேலையை கூட இதனால் வரை செய்யவில்லை அரக்கோணம் லோக்சபா தொகுதி அகதி தொகுதி. அது அகதி தொகுதியாக மாறி விட்டதாக அவர் ஆவேசமாக பேசினார்.
இதில் திரைப்பட நடிகை பபிதா ஒன்றிய செயலாளர்கள். அருணாபதி ,பழனி, சோளிங்கர் விஜயன் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர்.பாலு மாவட்ட துணை செயலாளர். டோமாஸ் ஒன்றிய துணை செயலாளர். புருஷோத்தமன் ஜே பேரவை செயலாளர். சங்கர் ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்
- செய்தியாளர். மு.பிரகாசம். நெமிலி தாலுக்கா.
No comments:
Post a Comment